குடிநீர் இல்லாமல் கஷ்டப்படுகிறாம்; கோரிக்கை வைத்த மக்களை ஆச்சரியப்படுத்திய விஷால்!
ரசிகர்கள் முன்வைத்துள்ள கோரிக்கையை நடிகர் விஷால் நிறைவேற்றியுள்ளார்.
’தாமிரபரணி’, ’பூஜை’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் தற்போது நடித்து வரும் தன்னுடைய 34வது படத்தில் நடித்து வருகிறார். ‘விஷால்34’ எனத் தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பின் இடைவெளியில் எம். குமாரசக்கனாபுரம் ஊராட்சி பொதுமக்கள் நடிகர் விஷால் அவர்களை சந்தித்து குடிநீர் வசதி இல்லாமல் மிகவும் கஷ்டப்படுவதாகவும் தங்களுக்கு குடிநீர் வசதி செய்து தரும்படியும் கோரிக்கை வைத்தனர்,
அக்கோரிக்கையை உடனே நிறைவேற்றுவதாக பொதுமக்களிடம் வாக்குறுதியளித்தார் நடிகர் விஷால்.

அதன்படி தனது மேலாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் மக்கள் நல இயக்கத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் பிரகாஷ் , M.குமாரசக்கனாபுரம் ஊராட்சி தலைவர் ராமகிருஷ்ணனை சந்தித்து கலந்தாய்வு செய்து ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அம்மக்கள் பயன்பெறும் வகையில் நடிகர் விஷாலின் தேவி அறக்கட்டளை சார்பில் ஆழ்துளை கிணறு போடும் வேலை முடித்து பொது மக்கள் முழுமையாக பயன்பெறும் வகையில் அவர்களுக்கு இரண்டு பெரிய சின்டக்ஸ் டேங்க் அமைத்து குடிநீர் வசதி செயல் திட்டம் செயல்பட்டு வருகிறது. அம்மக்கள் கொடுத்த கேரிக்கையை உடனே நிறைவேற்றிய நடிகர் விஷாலுக்கு அப்பகுதி மக்கள் நன்றி கூறி பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
இதையும் வாசிக்கலாமே...
5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு வந்தாச்சு... டிசம்பர் 3-ல் வாக்கு எண்ணிக்கை!
புதிய மதுக்கடைகள் திறக்கவேண்டும்... முதல்வருக்கு அழுத்தம் கொடுக்கும் எம்எல்ஏக்கள்!
பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு திடீரென வெளியேறிய பவா செல்லதுரை... புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!
சென்னையில் சோகம்: பயிற்சியின் போது ஜிம் பயிற்சியாளர் மாரடைப்பால் மரணம்!