இதுதான் ரியல் கேஜிஎஃப்...ரத்தம் தெறிக்கும் 'தங்கலான்' டீசர் எப்படி?

தங்கலான் படத்தில் விக்ரம்
தங்கலான் படத்தில் விக்ரம்

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தங்கலான்’ திரைப்படத்தில் விக்ரம், பாரவ்தி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தியும், அங்கு வேலை செய்தவர்களின் கதைகளைக் கொண்டும் வரலாறாக இந்தப் படம் உருவாகியுள்ளது என இயக்குநர் ரஞ்சித் தெரிவித்திருருந்தார். இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26-ம் தேதி வெளியாகிறது என்பதைப் படக்குழு அறிவித்துள்ளது.

படத்தின் கிளிம்ப்ஸ் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், படத்தின் டீசரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. டீசரின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை வரும் நடிகர்கள் யாரும் வசனம் ஏதும் பேசாமல் பெரும்பாலும் சண்டையும், போருமே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

‘தி சன் ஆஃப் கோல்ட் ரைசஸ்’ என்ற டேக் லைனோடு மகிழ்ச்சி, வன்முறை, துரோகம், தங்கவயலில் ரத்தம் சொட்டும் போர்க்களம், விக்ரம், பசுபதி, மாளவிகா மோகனன் என அடையாளம் தெரியாமல் ஆளே மாறியுள்ள ’தங்கலான்’ என இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ‘இதுதான் ரியல் கே.ஜி.எஃப்’ என இந்த டீசருக்கு ரசிகர்கள் வரவேற்புக் கொடுத்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in