‘பொன்னியின் செல்வன்’ விக்ரம் நெகிழ்ச்சி - ‘இதைவிட பெரிய சந்தோஷம் கிடைக்காது’

‘பொன்னியின் செல்வன்’ விக்ரம் நெகிழ்ச்சி - ‘இதைவிட பெரிய சந்தோஷம் கிடைக்காது’

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை அனைவரும் கொண்டாடுகின்றனர் என்று விக்ரம் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், “ ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கு கிடைத்த வரவேற்பு. ஆதித்த கரிகாலனுக்கு கிடைத்த ஆக்ரோஷமான பீடுபேக் அனைத்துக்கும் நன்றி. நான் நிறைய படங்கள் செய்துள்ளேன். நான் எப்போதும் எனது படங்கள் குறித்தும், எனது கேரக்டர் குறித்தும் பெருமைப் படுவேன். ஆனால் இளைஞர்கள், பொதுமக்கள், விமர்சகர்கள், பத்திரிகைகள் என ஆனால் எல்லோருமே கொண்டாடும் படமாக ‘பொன்னியின் செல்வன்’ உள்ளது. இதைவிட பெரிய சந்தோஷம் கிடைக்காது” என தெரிவித்துள்ளார். மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நன்றியும் கூறியுள்ளார்.

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் நேற்று வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனைப்படைத்து வருகிறது. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை பெரிதும் பேசுப்படும் வகையில் மாறியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in