நடிகர் விக்ரமுக்கு திடீர் மாரடைப்பு: தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

நடிகர் விக்ரமுக்கு திடீர் மாரடைப்பு: தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

பிரபல நடிகர் விக்ரமுக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சேது படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் விக்ரம். சாமி, அந்நியன், கந்தசாமி, ராவணன், ராஜபாட்டை, தாண்டவம், இரு முகன், ஐ, கடாரம் கொண்டான், மகான் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை விக்ரம் பெற்றுள்ளார்.

இந்நிலையில அவருக்கு இன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் விக்ரம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பிரார்த்தித்து வருகின்றனர்.

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ’பொன்னியின் செல்வன்’ படத்தின் டீஸர் வெளியீடு இன்று மாலை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் விக்ரமுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in