சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் நடிகர் விக்ரம்!

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் நடிகர் விக்ரம்!

உடல் நல குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை முடிந்து இன்று மாலை வீடு திரும்பினார் நடிகர் விக்ரம்.

மாரடைப்பு காரணமாக நடிகர் விக்ரம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விளக்கம் அளித்த விக்ரமின் மானேஜர் சூரியநாராயணன், "நடிகர் சீயான் விக்ரமுக்கு நெஞ்சில் அவுசரியம் ஏற்பட்டதை அடுத்து அவர் சிகிச்சைப் பெற்றுக்கொண்டார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக வெளியானத் தகவலில் உண்மை இல்லை. இதுதொடர்பான வதந்திகள் வேதனையை தருகின்றன. இப்போது விக்ரம் நலமாக இருக்கிறார்.

இன்னும் ஓரிரு நாளில் வீடு திரும்புவார். அவரைப் பற்றி வரும் வதந்திகளுக்கு இந்த தகவல் முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம்’’ என்று கூறியிருந்தார். இந்நிலையில், நடிகர் விக்ரம் சிகிச்சை முடிந்து இன்று மாலை வீடு திரும்பினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in