நடிகர் விக்ரமின் அடுத்த படம்... வெளியானது மாஸ் அப்டேட்!

நடிகர் விக்ரம்
நடிகர் விக்ரம்

’தங்கலான்’ படத்திற்குப் பிறகு நடிகர் விக்ரமின் 62ஆவது படம் குறித்தானத் தகவல் வெளியாகியுள்ளது.

’பொன்னியின் செல்வன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் விக்ரம் தற்போது பா. இரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வ அப்டேட் கொடுத்துள்ளது.

மேலும், கெளதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்திருந்த ‘துருவ நட்சத்திரம்’ படமும் அனைத்து வேலைகளும் முடிந்து வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது. இந்தப் படங்களுக்குப் பிறகு ‘சித்தா’ பட இயக்குநர் அருண்குமாருடன் இணைகிறார் எனவும், அதற்கான புரோமோ ஷூட் முடிந்து விட்டதாகவும் சொல்லப்பட்டது.

இந்த நிலையில், நடிகர் விக்ரமின் 62வது படம் குறித்தான அப்டேட் வெளியாகியுள்ளது. முன்பு வெளியான தகவலை உறுதிப்படுத்தும் வகையில் இயக்குநர் அருண்குமாருடன் இணைகிறார் விக்ரம். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். திருத்தணியை கதைக்களமாகக் கொண்டு காவல்நிலையத்தில் விக்ரம் அதிரடியாக அறிமுகம் ஆகும்படியாக வெளியாகியுள்ள இந்த புரோமோ வீடியோ கவனம் ஈர்த்துள்ளது. விக்ரம் தவிர மற்ற நடிகர்கள் குறித்தான அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கலாம். 'தங்கலான்', 'சியான் 62' என அடுத்தடுத்து அப்டேட் கொடுத்து வருவதால் விக்ரம் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in