நடிகர் விக்ரமுக்கு என்ன பிரச்சினை?

நடிகர் விக்ரமுக்கு என்ன பிரச்சினை?

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விக்ரமுக்கு என்ன பிரச்சினை என்பது தெரிய வந்துள்ளது.

பிரபல நடிகர் விக்ரமுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதையடுத்து அவர் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாயின. இது தமிழ்த்திரையுலகில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ’பொன்னியின் செல்வன்’ படத்தின் டீசர் இன்று மாலை வெளியாக உள்ள நிலையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக வெளியான செய்தியால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர் விரைவில் குணமடைய சமூக வலைதளங்களில் பிரார்த்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் விக்ரமுக்கு என்ன பிரச்சினை என்பது பற்றி விசாரித்தபோது, நேற்று மாலை அவருக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ஆஞ்சியோ கிராபி சிகிச்சை அளித்ததாகவும் பின்னர் அவருக்கு ஸ்டென்ட் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இப்போது அவர் நலமாக உள்ளார். விரைவில் வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in