“திராவிட கட்சிகளுக்கு வாக்களிக்காதீங்க...“ நடிகர் விஜய் அறிக்கை உண்மையா?!

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

திராவிட கட்சிகளுக்கு ஓட்டுப் போட வேண்டாம் என்று நடிகர் விஜய் சார்பில் வெளியிடப்பட்டுள்ளதாக ஒரு அறிக்கை இணையத்தில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், நடிகர் விஜயின், ‘தமிழக வெற்றிக் கழகம்’ பெயரில் போலியாக விஷமிகள் யாரோ உருவாக்கி வெளியிட்டிருக்கும் அறிக்கை அது என்று நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.

இணையத்தில் உலவும் போலி அறிக்கை
இணையத்தில் உலவும் போலி அறிக்கை

கடந்த பிப்ரவரி மாதம், ‘தமிழக வெற்றிக் கழகம்’ என கட்சி பெயரை அறிவித்து அரசியலில் களமிறங்கினார் நடிகர் விஜய். கைவசம் இருக்கும். ‘GOAT' படம் மற்றும் ‘தளபதி 69’ படங்களை முடித்துவிட்டு முழு நேரமாக அரசியல் களத்தில் இறங்கப் போவதாகவும், மக்களவைத் தேர்தலில் தான் பங்குப்பெற போவதில்லை என்றும் 2026 சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என்றும் அப்போது நடிகர் விஜய் தெளிவுபடுத்தி இருந்தார். தனது கட்சிப் பெயரில் தனியாக சமூகவலைதளப் பக்கங்களைத் தொடங்கி அதில் கட்சி தொடர்பான அறிவிப்புகள், வாழ்த்துகள் என வெளியிட்டு வருகிறார் விஜய்.

இந்நிலையில், தவெக சார்பில், திராவிட கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என்ற அறிக்கை இணையத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

அதில், ‘வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சியை மட்டும் பாராமல் ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு செயல்படுவர்கள் யார் என்று மனதில் வைத்து அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். குறிப்பாக, திராவிட பிரிவினை வாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

நடிகர் விஜய்க்கு மதரீதியாக பல இடைஞ்சல்களை கொடுத்து வந்த பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராகவே தனது நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார் நடிகர் விஜய். அதிலும் தனது கட்சியின் ஸ்லோகனாக ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதை வைத்திருக்கிறார். அப்படியானவர், திராவிட கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறாரா என ரசிகர்கள் வாயடைத்துப் போயிருந்தனர்.

ஆனால், இது போலியான அறிக்கை என தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. ‘2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போட வேண்டாம் என்று தமிழக வெற்றிக்கழகம் சார்பில் விஜய் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. அப்படி வரும் அறிக்கை போலியானது’ என்று தவெக சார்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...    

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்... பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்!

‘ஜப்பான், பிலிப்பைன்ஸில் சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு... சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சரிந்தன!

கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து... 29 பேர் எரிந்து உயிரிழந்த பரிதாபம்!

வள்ளி கும்மி நடனமாடி வாக்கு சேகரித்த அண்ணாமலை... கோவை பரப்புரையில் குதூகலம்!

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.4 கோடி பறிமுதல்... வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in