நோட்டாவுக்கு ஓட்டு போடாதீங்க... இவங்களுக்கு வாக்களியுங்கள்... விஜய் ஆண்டனி பரபரப்பு பேச்சு!

விஜய் ஆண்டனியுடன் நடிகை மிருணாளினி ரவி
விஜய் ஆண்டனியுடன் நடிகை மிருணாளினி ரவி

மக்களவைத் தேர்தலில் நோட்டாவிற்கு வாக்களிக்கக் கூடாது எனவும், வொர்ஸ்டில் பெஸ்ட் யாரோ அவருக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் நடிகர் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, விநாயக் வைத்தியநாதன் இயக்கி உள்ள ரோமியோ படத்தில் நடித்துள்ளார். மிருணாளினி ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு உள்ளிட்ட நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் ரோமியோ திரைப்படத்தை தயாரித்துள்ளது. பரத் தனசேகர், இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார். ரோமியோ படம் வருகிற ஏப்ரல் 11ம் தேதி தமிழ்நாடு முழுவதும் வெளியாக உள்ளது.

விஜய் ஆண்டனியுடன் நடிகை மிருணாளினி ரவி
விஜய் ஆண்டனியுடன் நடிகை மிருணாளினி ரவி

இதையொட்டி ப்ரொமோஷன் நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் உணவகத்தில் ரோமியோ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் ஆண்டனி, ”ரோமியோ திரைப்படம், திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவி இடையே காதல் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து விளக்குகிறது. 2கே கிட்ஸ், 90ஸ் கிட்ஸ், 80ஸ் கிட்ஸ் என்று இல்லாமல், காதல் என்பது அனைவருக்கும் ஒன்றுதான். அனைத்து வயதினருக்கும் ஒன்றுதான். அனைத்து விதமான மொழிகளில் வரும் படங்களும் தமிழ் சினிமாவில் வெற்றி பெறுவது வரவேற்கக் கூடியது. மொழிகளை தாண்டி படங்கள் வெற்றி அடைவது கலாச்சார வளர்ச்சி என நினைக்கிறேன்” என்றார்.

விஜய் ஆண்டனியுடன் நடிகை மிருணாளினி ரவி
விஜய் ஆண்டனியுடன் நடிகை மிருணாளினி ரவி

மேலும், ” உயிர் இழப்புகள் என்பது அனைத்து துறைகளிலும் இருக்கிறது. அனைவரும் உடல் நலத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. கண்டிப்பாக நடிகர் சங்க கட்டிடத்திற்கு உதவுவேன். அரசியலுக்கு வரும் எண்ணம் தற்போது வரை இல்லை. அனைவரும் சேர்ந்து அரசியலுக்கு அழைத்தால் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். வருகின்ற மக்களவைத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். 90% வாக்கு அனைவரும் செலுத்த வேண்டும். நோட்டாவிற்கு வாக்களிக்கக்கூடாது என்பது என்னுடைய நிலைப்பாடு. வொர்ஸ்டில் பெஸ்ட் என்று ஒன்று இருக்கும். அதற்கு வாக்களிக்க வேண்டும்.” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...    

அண்ணாமலை முன்னிலையில் பாஜகவினர் மோதல்... கடலூரில் பரபரப்பு!

கமல் படத்திற்காக பிணத்திற்கு மேக்கப் போட்ட டேனியல் பாலாஜி!

பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை... வெளியானது அதிர்ச்சி வீடியோ!

ஆடுஜீவிதம் - சினிமா விமர்சனம்

மின்கம்பத்தில் மோதி சிதறிய இருசக்கர வாகனம்... கபடி வீரர்கள் இருவர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in