நடிகர் விஜய்யின் `வாரிசு' படம் ஜனவரி 12-ல் ரிலீஸ்?

நடிகர் விஜய்யின் `வாரிசு' படம் ஜனவரி 12-ல் ரிலீஸ்?

நடிகர் விஜய் நடித்துள்ள 'வாரிசு' படத்தை ஜனவரி 12-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் 'வாரிசு'. ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் சாட்டிலைட் உரிமை 50 கோடி ரூபாய்க்கும், டிஜிட்டல் உரிமை 60 கோடி ரூபாய்க்கும், வெளிநாட்டு உரிமை 32 கோடி ரூபாய்க்கும், இந்தி டப்பிங் உரிமை 32 கோடி ரூபாய்க்கும், ஆடியோ உரிமை 10 கோடி ரூபாய்க்கும் விற்பனையாகியிருக்கிறது. இதன் மூலம் வெளியிடப்படுவதற்கு முன்பே இப்படம் 184 கோடி ரூபாய் வசூல் ஈட்டி உள்ளது.

இந்நிலையில் இப்படம், அடுத்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக இருப்பதாக முதலில் தகவல் வெளியானது. இதனிடையே, ஜனவரி 12-ம் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in