நடிகர் விஜயின் 'வாரிசு’ பட போஸ்டர் பிரபல ஆடை நிறுவன விளம்பரத்தின் காப்பியா?: என்ன சொல்கிறது ஓட்டோ?

நடிகர் விஜயின் 'வாரிசு’ பட போஸ்டர் பிரபல ஆடை நிறுவன விளம்பரத்தின் காப்பியா?: என்ன சொல்கிறது ஓட்டோ?

நடிகர் விஜய்யின் 48-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி அவர் நடித்து கொண்டிருக்கும் 66-வது படத்தின் முதல் பார்வை மற்றும் படத்தலைப்பு 'வாரிசு' என அவரது பிறந்தநாளுக்கு முந்தைய நாள் மாலை படக்குழு வெளியிட்டது. 'The Boss Returns' என்ற ஹேஷ்டேக்குடன், அசத்தலான கோட் சூட்டுடன் விஜய் அமர்ந்திருக்கும் வகையில் அந்த போஸ்டர் இருந்தது.

மீம்ஸ்
மீம்ஸ்

இதனை அடுத்து, நடிகர் துல்கர் சல்மான் பிரபல ஆடை நிறுவனமான ஓட்டோ (OTTO) விளம்பரம் ஒன்றில் கோட் சூட் அணிந்து கொண்டு அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை, 'வாரிசு' படத்தின் முதல் பார்வையுடன் ஒப்பிட்டு 'இரண்டும் ஒன்று போல இருக்கிறதே, இதை கூடவா படக்குழு காப்பி அடிக்கும்' என இரண்டு புகைப்படங்களையும் ஒப்பிட்டு இணையத்தில் அந்த புகைப்படத்தை மீம்ஸ் கிரியேட்டர்கள் பகிர்ந்து வந்தனர்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து ஓட்டோ நிறுவனமே இதற்கு அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம், " நாங்கள் எல்லா விளம்பரங்களுமே அசலாகவே செய்வோம். அதை எடுத்து இது போன்று தவறாக உபயோகிக்க வேண்டாம். ஏனெனில், துல்கர் சல்மானை வைத்து இப்படி வந்துள்ள விளம்பரம் பொய்யானது. ஏதோ ஒரு மீம் கிரியேட்டர், கேலிக்காக இப்படி ஒரு பொய்யான புகைப்படங்களை சித்தரித்துள்ளார். அதனால், யாரும் இதை நம்ப வேண்டாம். எங்கள் அணி சார்பாக 'வாரிசு' படக்குழுவினருக்கு எங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறோம்' என 'வாரிசு' படத்தின் முதல் பார்வை போஸ்டர் தங்கள் நிறுவனத்தின் காப்பி இல்லை என விளக்கமளித்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது ஓட்டோ நிறுவனம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in