‘வாரிசு’ வெற்றிக்கு, விஜய் ரசிகர்கள் 108 தோப்புக்கரணம்!

‘வாரிசு’ வெற்றிக்கு, விஜய் ரசிகர்கள் 108 தோப்புக்கரணம்!

வாரிசு திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்ற வேண்டுதலுடன் நடிகர் விஜய் ரசிகர்கள், மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் 108 தோப்புக்கரணம் போட்டு வழிபாடு செய்தனர். 

நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் எதிர்வரும் புதன்கிழமையன்று திரைக்கு வரவுள்ளது. அந்த திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நடிகர் விஜயின் ரசிகர்கள் சபரிமலை  ஐயப்பன் கோயில் உள்ளிட்ட பல ஆன்மீக தலங்களிலும் பிரார்த்தனைகள் செய்து வருகிறார்கள்.  அவ்வகையில் வாரிசு வெற்றியடைய வேண்டி மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் அவரது ரசிகர்கள் இன்று தோப்புக்கரணம் போட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்துக்கு விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட தலைவர் குட்டி கோபி தலைமையில் ரசிகர்கள் திரண்டனர். வாரிசு  திரைப்பட போஸ்டருடன் வந்தவர்கள் மயூரநாதர், அபயாம்பிகை அம்பாள் ஆகிய சன்னதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டனர்.

அதனைத் தொடர்ந்து விநாயகர் சன்னதியில் படம் வெற்றி பெற வேண்டி 108 தோப்புக்கரணம் போட்டு வினோத வழிபாட்டில் ஈடுபட்டனர். மேலும் ஆலய வளாகத்தில் பக்தர்களுக்கு  அன்னதானம் வழங்கியும், படம் வெற்றி பெற வேண்டி வழிபாடு நடத்தினர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in