நடிகர் விஜயின் 'வாரிசு' படத்தயாரிப்பாளரின் அடுத்த ஹீரோ சிவகார்த்திகேயன்

நடிகர் விஜயின் 'வாரிசு' படத்தயாரிப்பாளரின் அடுத்த ஹீரோ சிவகார்த்திகேயன்

நடிகர் விஜய் நடித்த 'வாரிசு' படத்தை தயாரித்த தில் ராஜு அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு திரையுலக முன்னணி தயாரிப்பாளராக திகழ்பவர் தில் ராஜு. இவர் நடிகர் விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தைத் தயாரித்து வருகிறார். இப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இந்த நிலையில், தில் ராஜு அடுத்ததாக தமிழில் தயாரிக்க உள்ள திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை தெலுங்கின் பிரபல இயக்குநரான ஹரி ஷங்கர் இயக்க உள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகிறது. சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் 'மாவீரன்' திரைப்படத்தில் நடித்துவருகிறரர். இதையடுத்து நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் நடிக்க உள்ளார். இப்படம் தயாரிப்பு பணி தாமதமாகி வருவதால் தில் ராஜு தயாரிப்பில் உருவாக இருக்கும் படம் பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in