விஜய்யின் `வாரிசு’ தள்ளிப் போகிறதா: தயாரிப்பாளர் எடுக்கும் முடிவு என்ன?

விஜய்யின் `வாரிசு’ தள்ளிப் போகிறதா: தயாரிப்பாளர் எடுக்கும் முடிவு என்ன?

நடிகர் விஜய்யின் ‘வாரிசு’ படம் தெலுங்கில் வெளியாவதில் சிக்கல் வந்திருக்கிறது.

‘பீஸ்ட்’ படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை ஒட்டி இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. படத்தில் இருந்து முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ வெளியாகி இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த நிலையில், தெலுங்கில் ‘வாரிசு’ படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அதாவது கடந்த 2019-ம் ஆண்டு தெலுங்கில் இருந்து நேரடியாக வெளியாகும் படங்களுக்கே சங்கராந்தி/ பொங்கல் போன்ற விடுமுறை அன்று முதலில் முக்கியத்துவம் தர வேண்டும் என்றும், தெலுங்கில் நேரடியாக வெளியாகமல் டப்பிங் செய்து வெளியாகும் படங்களுக்கான முக்கியத்துவம் குறைவாக இருக்கும் என்று தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் முடிவு எடுக்கப்பட்டது. இதனை அடுத்து ‘வாரிசு’ திரைப்படம் தமிழில் நேரடியாகவும் தெலுங்கில் டப் செய்தும் வெளியிடப்படுகிறது.

அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையின் போது, நடிகர்கள் அகில் அகினேனியின் ‘ஏஜெண்ட்’ திரைப்படம், நந்தமுரி பாலகிருஷ்ணாவின் ‘வீர நரசிம்ம ரெட்டி’, சிரஞ்சீவியின் ‘வால்டர் வீரய்யா’ ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன. இந்தப் படங்களுக்கு சங்கராந்தி பண்டிகையில் முதலில் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுவிட்டு பிறகே நடிகர் விஜய்யின் ‘வாரிசு’ படத்திற்கான தியேட்டர்கள் ஒதுக்கப்படும்.

இதனால், தெலுங்கில் ‘வாரிசு’ திரைப்படம் சங்கராந்தி பண்டிகையில் தெலுங்கில் வெளியானாலும் போதிய தியேட்டர்கள் கிடைக்காவிட்டால் வசூல் பாதிக்கப்படும். இதனால், ‘வாரிசு’ திரைப்படம் தெலுங்கில் சங்கராந்தி விடுமுறையில் வெளியாகுமா அல்லது வெளியீடு தள்ளிப் போகுமா என்பது குறித்து தயாரிப்பாளர் தில் ராஜூ என்ன முடிவெடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in