நாளை நடைபெறுகிறது விஜய்யின் 'வாரிசு' இசைவெளியீட்டு விழா: ஹைலைட்ஸ் என்னென்ன?

நாளை நடைபெறுகிறது  விஜய்யின் 'வாரிசு' இசைவெளியீட்டு விழா: ஹைலைட்ஸ் என்னென்ன?

நாளை நடைபெற இருக்கும் ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் விஜய், ராஷ்மிகா மந்தனா, ஷ்யாம் உள்ளிட்டப் பல நட்சத்திரங்கள் நடித்திருக்கக்கூடிய ‘வாரிசு’ திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது. இதனையொட்டி படத்தின் இசைவெளியீட்டு விழா நாளை மாலை சென்னையில் நடைபெற இருக்கிறது.

‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் பங்கேற்கும் இசை வெளியீட்டு விழா இது என்பதால் ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. நாளை விழாவில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?

விழா ஹைலைட்ஸ் என்ன?

படத்தின் இசையமைப்பாளரான தமன் படத்தில் இருந்து அனைத்து பாடல்களையும் லைவ்வாக மேடையில் பாட இருக்கிறார். படத்தில் இருந்து இதுவரை ‘ரஞ்சிதமே’, ‘தீ தளபதி’, ‘அம்மா’ பாடல் வெளியாகியுள்ள நிலையில் படத்தில் நடிகர் விஜய்யின் அறிமுகப் பாடலை அனிருத் பாடி இருக்கிறார். நாளை இசை வெளியீட்டு விழாவில் அனிருத்தும் லைவ்வாக பாடல் பாட இருக்கிறார். வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கும் ‘துணிவு’ படத்திலும் அஜித்திற்கு ‘சில்லா சில்லா’ பாடல் அனிருத் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமல்லாமல் ஷாருக்கான், கமல்ஹாசன் மற்றும் மகேஷ் பாபு ஆகியோர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் நாயகி ராஷ்மிகா இசைவெளியீட்டு விழாவில் பங்கேற்க இருப்பதை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்திலேயே உறுதி செய்திருக்கிறார்.

விஜய்யின் ‘குட்டி ஸ்டோரி’:

இசைவெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யிடம் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது அவருடைய ‘குட்டி ஸ்டோரி’ தான். ‘மாஸ்டர்’ பட இசைவெளியீட்டு விழாவில் விஜய்யின் ரெய்டு ஸ்பீச்சு ரசிகர்களிடையே வைரலானது. அதுபோல, இந்த முறையும் ‘வாரிசு’ vs ‘துணிவு’, ‘வாரிசு’ தெலுங்கு வெளியீட்டு பிரச்சினை, இங்கு தமிழகத்தில் தியேட்டர்கள் எண்ணிக்கை எதிர்பார்ப்பு, அரசியல் பிரவேசம் ஆகியவைப் பற்றி விஜய் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொலைக்காட்சி ப்ரீமியர் எப்போது?

நடிகர் விஜய்யின் முந்தைய படங்களின் இசைவெளியீட்டு விழா போல தொலைக்காட்சியில் லைவ்வாக ஒளிபரப்பு செய்யாமல் ஒரு வாரம் கழித்து புது வருட சிறப்பு நிகழ்ச்சியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யத் திட்டமிட்டு இருக்கிறார்கள். மேலும், அப்போது படத்தின் டிரைய்லரும் எதிர்பார்க்கலாம்.

தளபதி 67’ அறிவிப்பு?

இசை வெளியீட்டு விழாவிற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜூம் வர இருக்கிறார். ’மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் இணையும் ‘தளபதி 67’ படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வர வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in