நடிகர் விஜய்யின் ட்விட்டர் டி.பியில் 'வாரிசு'

நடிகர் விஜய்யின் ட்விட்டர் டி.பியில் 'வாரிசு'

'வாரிசு' படத்தின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தின் டி.பியாக நடிகர் விஜய் மாற்றியுள்ளார்.

இயக்குநர் வம்சி இயக்கத்தில் தமிழ் ,தெலுங்கு என இரு மொழிகளில் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘வாரிசு’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷ்யாம், குஷ்பு உள்பட பலர் நடிததுள்ளனர்

வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ள வாரிசு படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அத்துடன் படத்தின் ப்ரமோஷன் பணிகளும் தொடங்கியுள்ளன. குடும்பச் சித்திரமாக உருவாக்கப்பட்டு வரும் இப்படத்தை விஜய்யின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தின் டி.பியை மாற்றியுள்ளார். .அதில், வாரிசு திரைப்படத்தின் புகைப்படத்தை முகப்பாக வைத்துள்ளார். இதைப் பார்த்து அவரது ரசிகர்கள் குதூகலமாகியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in