Thalapathy 68 Pooja Video: மோகன், சினேகா... அட இந்த 90'ஸ் நடிகையும் 'தளபதி68'ல் இருக்கிறாரா?

தளபதி 68
தளபதி 68

நடிகர் விஜய்யின் 'தளபதி 68' படத்தின் பூஜை புகைப்படங்களும் வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தன்னுடைய 67வது படமாக நடிகர் விஜய் 'லியோ' படத்தில் நடித்து இதன் கருத்து தளபதிக்காக வெங்கட் பிரபுவுடன் முதல் முறையாக இணைகிறார் நடிகர் விஜய். இந்த நிலையில் `தளபதி 68' படத்திற்கான பூஜையும் போடப்பட்டுவிட்டது. மாஸான ஒரு ஆக்‌ஷன் காட்சியும் பிரபுதேவா கோரியோகிராஃபியில் ஒரு பாடலுக்கான நடனமும் படமாக்கப்பட்ட நிலையில் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

'லியோ' படத்தின் வெளியீட்டிற்குப் பிறகே 'தளபதி 68' படத்தின் அப்டேட் ஒவ்வொன்றாக வரும் எனப் படக்குழு சொல்லியிருந்த நிலையில், தற்போது 'தளபதி 68' படத்தின் பூஜை படங்களும் வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் புகைப்படங்களை ரசிகர்கள் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். இதில் முன்பே கேள்விப்பட்டபடி நடிகர்கள் பிரபுதேவா, மோகன், ஷ்யாம், யோகிபாபு, சிநேகா, லைலா, பிரஷாந்த், ஜெயராம் ஆகியோர் இணைந்துள்ளனர். கதாநாயகியாக மீனாட்சி செளத்ரி நடிக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in