ரஜினியின் 'தலைவர் 171' கதையைச் சொன்ன லோகேஷ்... நடிகர் விஜய் ரியாக்‌ஷன் என்ன?

'தலைவர் 171’
'தலைவர் 171’
Updated on
1 min read

‘தலைவர் 171’ படத்தின் கதையை நடிகர் விஜயிடம் சொன்ன போது அவர் தந்த ரியாக்‌ஷன் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

’லியோ’ படத்திற்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய அடுத்தப் படமாக ‘தலைவர் 171’ படத்தை இயக்குவதாக அறிவித்து இருக்கிறார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். அவர் தற்போது தன்னுடைய 170வது படத்தில் பிஸியாக இருக்கிறார்.

இதனை முடித்ததும் ‘தலைவர் 171’ படப்பிடிப்பு ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ‘லியோ’ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் கொடுத்திருந்த சமீபத்திய பேட்டி ஒன்றில், விஜயிடம் ‘தலைவர் 171’ படத்தின் கதையைக் கூறியிருப்பது பற்றித் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

'தலைவர் 171' படத்தின் கதையின் ஒன்லைனிலேயே மிகவும் ஈர்க்கப்பட்ட விஜய், வெறும் 10 நிமிட கதை சொன்ன உடனேயே லோகேஷிடம், ‘பயங்கரமா இருக்குடா’ என்று கூறி பாராட்டியுள்ளார். விஜய் கொடுத்திருக்கும் இந்த ரியாக்‌ஷன் ‘தலைவர் 171’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in