தீவிர அரசியலுக்கு அடிபோடும் நடிகர் விஜய்: அடுத்தத் திட்டம் அறிவிப்பு!

நடிகர் விஜய்
நடிகர் விஜய்
Updated on
2 min read

அரசியலில் நுழைவதற்கான தீவிர செயல்பாடுகளை முன்னெடுத்து வரக்கூடிய நடிகர் விஜய் அடுத்து இளைஞர்களை குறிவைத்து எடுத்து வரக்கூடிய திட்டம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் வசூல் நாயகனாக வலம் வரக்கூடிய நடிகர் விஜய். அவரது நடிப்பில் சமீபத்தில் ‘லியோ’ படம் வெளியானது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக 500 கோடி ரூபாயை உலகம் முழுவதும் வசூல் செய்தது. இந்த நிலையில், தனது அரசியல் ஆசையை நடிகர் விஜய் தீவிரமாகப் பட்டைத் தீட்டி வருகிறார். அந்த வகையில், பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்த நிகழ்வு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதுமட்டுமல்லாது, விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் தொடங்கப்பட்ட ரத்ததான மையம், விஜய் விழியகம், விஜய் பயிலகம், விஜய் மினி கிளினிக் உட்பட பல விஷயங்களும் முன்னெடுக்கப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக விஜய் நூலகம் அமைக்கப்பட உள்ளது.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

இதன் அறிவிப்பை விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்து வெளியிட்டுள்ளார். தற்போது முதற்கட்டமாக ’தளபதி விஜய் நூலகம்’ திட்டம் நாளை சனிக்கிழமை (18/11/2023) அன்று காலை 10.35 மணியளவில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தொண்டரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தாம்பரம் தொகுதி பாலாஜி நகர் 3-வது தெரு, CTO காலனி, மேற்கு தாம்பரத்தில் புஸ்ஸி ஆனந்த் தொடங்கி வைக்கிறார்.

அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்லாவரம் தொகுதியில் தாம்பரம் மாநகராட்சி மும்மூர்த்தி நகர் 5-வது தெருவில் இந்தத் திட்டத்தினைத் தொடங்கி வைக்கிறார்.

விஜய், புஸ்ஸி ஆனந்த்
விஜய், புஸ்ஸி ஆனந்த்

அதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்று இடங்களிலும், அரியலூர், நாமக்கல் மேற்கு, சென்னை கிழக்கு, வடசென்னை கிழக்கு, வடசென்னை வடக்கு இளைஞரணி மற்றும் வேலூர் தொண்டரணி ஆகிய மாவட்டங்களைச் சேர்த்து 11 இடங்களிலும் தளபதி விஜய் நூலகம் திறக்கப்பட உள்ளது.

மேலும் இரண்டாம் கட்டமாக வருகின்ற 23.11.2023 (வியாழக்கிழமை) அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் ஐந்து இடங்களிலும், கோவை மாவட்டத்தில் நான்கு இடங்களிலும் ஈரோடு மாவட்டத்தில் மூன்று இடங்களிலும் தென்காசி மாவட்டத்தில் இரண்டு இடங்களிலும் சேலம், புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, திண்டுக்கல் மேற்கு, கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களை சேர்த்து 21 இடங்களிலும் தளபதி விஜய் நூலகம் திறக்கப்பட உள்ளது என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in