
நடிகர் விஜய் தனது திருமண மண்டபங்களை ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் வைக்க வாடகைக்கு விடப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தற்போது 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்தது.
தற்போது சினிமா துறையினர் அங்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 'வாரிசு' படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நடிகர் விஜய் சினிமாவில் நடிப்பதில் மட்டுமின்றி சென்னை சாலிகிராமம், வடபழனி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல இடங்களில் திருமண மண்டபங்களை நடத்தி வருகிறார். தற்போது இந்த மண்டபங்களை ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் வைக்க வாடகைக்கு விடப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.