`புல்லாங்குழலா இருக்க ட்ரை பண்ணுவோம்’: விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!

`புல்லாங்குழலா இருக்க ட்ரை பண்ணுவோம்’: விஜய் சொன்ன 
குட்டி ஸ்டோரி!

நடிகர் விஜய் சொன்ன புதிய குட்டி ஸ்டோரி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ’பீஸ்ட்’ வரும் 13-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் நடிகர் விஜய் அளித்த ஸ்பெஷல் பேட்டி, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. பத்து வருடத்துக்குப் பிறகு விஜய் அளித்த பேட்டி இது. அவரிடம் பேட்டிக் கண்ட இயக்குநர் நெல்சன், குட்டி ஸ்டோரி ஒன்றை கேட்டார்.

அப்போது நடிகர் விஜய் கூறிய கதை: காற்று எப்படிலாம் பயன்படுதுன்னு ஒரு கதை படிச்சேன். ஒரு நாள், புட்பால் கேட்டுதாம், புல்லாங்குழலைப் பார்த்து, ’இங்க பாரு எனக்குள்ளயும் காத்துதான் இருக்கு, ஒனக்குள்ளயும் காத்துதான் இருக்கு. உன்னை உதட்டுல வச்சு முத்தம் கொடுக்கிறாங்க, என்னைத் தூக்கிபோட்டு மிதிக்கிறாங்க, ஏன்? அப்படின்னு கேட்டுச்சாம்.

அதுக்கு புல்லாங்குழல் சொல்லுச்சாம், ‘ரொம்ப சிம்பிள். நீ வாங்குற காற்றை எல்லாம் நீயே வச்சுக்கிற. யாருக்கும் கொடுக்க மாட்டேங்கிற, அதனால உதை வாங்குற. ஆனா நான், எனக்குள்ள வர்ற காற்றை இசையா மாத்தி மத்தவங்களுக்கு கொடுக்கறேன். மத்தவங்களுக்கு கொடுக்கிறவங்க முத்தமிடப்படுவாங்க. உதவாம சுயநலமா இருந்தா உன்னை மாதிரி மிதிதான் வாங்குவாங்க. அதனால இனிமேலாவது நாலு பேருக்கு பயன்படு, சரியா?ன்னு போயிடுச்சாம் புல்லாங்குழல். அதனால புட்பாலை விட புல்லாங் குழலா இருக்க, நாம ட்ரை பண்ணலாம்’.

இவ்வாறு நடிகர் விஜய் கூறினார். இந்த கதை சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in