'லியோ' படத்திற்கான ப்ரீமியர் காட்சிகள் ரத்து...ரசிகர்கள் அதிர்ச்சி!

’லியோ’ படத்தில் விஜய், த்ரிஷா
’லியோ’ படத்தில் விஜய், த்ரிஷா

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ படத்தின் ஐமேக்ஸ் வெர்ஷன் ப்ரீமியர் ஷோக்கள் அமெரிக்காவில் ரத்தாகி உள்ளதால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ’லியோ’ திரைப்படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், கோவை, மதுரை, சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியுள்ளது. ஆனால், வெளிநாடுகளில் கடந்த மாதமே படத்தின் முன்பதிவு தொடங்கிவிட்டது.

இந்த நிலையில், ’லியோ’ படத்தின் ப்ரீமியர் காட்சிகள் அமெரிக்காவில் ரத்து செய்யப்பட்டு உள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

’லியோ’
’லியோ’

’லியோ’ படத்தின் ப்ரீமியர் காட்சி அமெரிக்காவில் அக்டோபர் 18 -ம் தேதியே திரையிடப்பட உள்ளது. இதற்கான முன்பதிவும் முடிந்துவிட்ட நிலையில், தற்போது ’லியோ’ ஐமேக்ஸ் வெர்ஷனுக்கான ப்ரீமியர் காட்சிகள் மட்டும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. படம் அனுப்ப தாமதமானதன் காரணமாகவே அங்குள்ள ஐமேக்ஸ் திரையரங்குகளில் திரையிட இருந்த ப்ரீமியர் காட்சிகளை ரத்து செய்துள்ளனர்.

அதற்காக டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணத்தை திருப்பி தரும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஐமேக்ஸ் அல்லாத திரையரங்குகளில் ’லியோ’ திட்டமிட்டபடி ரிலீஸாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in