அதிர்ச்சி... `லியோ’ படம் வெளியாவதற்கு முன்பே போலி டிக்கெட் விற்பனை

'லியோ' படத்தில் விஜய்
'லியோ' படத்தில் விஜய்

'லியோ’ படத்திற்கு போலி டிக்கெட்டுகள் விற்பனை காரணமாக தியேட்டர் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள திரையரங்கம் பெயரில் போலியான டிக்கெட்டுகள் சமூக வலைதளங்கள் மூலமாக விற்பனை செய்யப்படுவதாக தகவல் பரவியுள்ளது.

திரையங்கு வெளியிட்ட அறிக்கை...
திரையங்கு வெளியிட்ட அறிக்கை...

’லியோ’ திரைப்படத்தின் ப்ரீமியர் காட்சி, அதாவது அக்டோபர் 18ம் தேதி மாலை 6.30 மணிக்கு சிறப்பு காட்சிகள் வெளியிடுவதாக கூறி மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள சினிப்பிரியா திரையரங்கம் பெயரில் போலியான டிக்கெட்டுகள் சமூக வலைதளங்கள் மூலமாக விற்பனை செய்யப்படுவதாக தகவல் பரவியது.

இது தொடர்பாக சினிப்பிரியா திரையரங்க நிர்வாகம் தனது முகநூல் பக்கத்தில் ’லியோ’ திரைப்படம் தொடர்பாக 18ம் தேதி மாலை சிறப்பு காட்சி என்று வெளியாகி உள்ள டிக்கெட் போலியானவை எனவும், இதனை யாரும் வாங்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.

லியோ படத்தில் விஜய்
லியோ படத்தில் விஜய்

மதுரையில் லியோ திரைப்பட சிறப்புக் காட்சி என்ற பெயரில் போலியான டிக்கெட் விற்பனை செய்யப்படுவது தொடர்பான புகாரில் சமூகவலைதளங்கள் மூலமாக விற்பனை செய்யப்படக்கூடிய நபர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதுபோன்ற போலி டிக்கெட்டுகள் அச்சத்தால்தான் ‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவும் ரத்து செய்யப்பட்டது.

ஏற்கெனவே, இந்தப் படத்தில் போதைப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலான பாடல் வரிகள், பெண்களை இழிவாக பேசும் வசனங்கள், நடனக்கலைஞர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை ஆகியவற்றால் சர்ச்சைக்குள்ளானது.

இப்போது இந்த டிக்கெட் பிரச்சினையும் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in