பிரபலங்களின் 'பீஸ்ட்' வாழ்த்தும்; டிரெய்லரில் புகுத்திய புதுமையும்!

பிரபலங்களின் 'பீஸ்ட்' வாழ்த்தும்; டிரெய்லரில் புகுத்திய புதுமையும்!

ரசிகர்கள் பலரும் எதிர்ப்பார்த்திருந்த நடிகர் விஜய்யின் 'பீஸ்ட்' படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் படம் 'பீஸ்ட்'. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படம் இந்த மாதம் 13-ம் தேதி வெளியாக இருக்கிறது. ஒரு மாலில் மாட்டி கொண்டு இக்கட்டான சூழலில் இருப்பவர்களை நடிகர் விஜய் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதையின் ஒன்லைன். பரபர ஆக்‌ஷன் காட்சிகளுடன் ஈசிஆரில் உள்ள ஒரு மால் மற்றும் ஜார்ஜியா காட்சிகள் டிரெய்லரில் விரிவடைகின்றன.

இந்த மால் விவகாரத்தை கையாளும் காவல்துறை அதிகாரியாக இயக்குநர் செல்வராகவன் வருகிறார். இவரது கதாப்பாத்திரத்தில் இயக்குநர் நெல்சனின் வழக்கமான நையாண்டி வசனங்கள் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது. மேலும் அரசியல் பற்றியும் நடிகர் விஜய் இதில் பேசியுள்ளார்.

பீஸ்ட்' பட டிரெய்லர் பார்த்துவிட்டு நடிகர் ஷாந்தனு, நடிகை கீர்த்தி சுரேஷ், விஜய்யின் அடுத்த பட இயக்குநர் வம்சி, நடிகர் கவின் ஆகியோர் தங்களது மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தில் நடிகர் விஜய்யின் கதாப்பாத்திர பெயர் வீர ராகவன். படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள்தான் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அதில் 'அரபிக்குத்து' மற்றும் 'ஜாலியோ ஜிம்கானா' பாடல் வெளியாகி இப்போது வரை ட்ரெண்டில் உள்ளது. மேலும் 'பீஸ்ட்' படத்திற்கான எமோஜியும் ட்விட்டர் பக்கத்தில் ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு ஆடியோ லான்ச் இல்லாத நிலையில் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் இயக்குநர் நெல்சன், நடிகர் விஜய்யை எடுத்த பேட்டியை ஒளிபரப்ப இருக்கிறார்கள். நீண்ட நாட்கள் கழித்து நடிகர் விஜய் தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்து இருக்கிறார்.

முதல் முறையாக 'பீஸ்ட்' டிரெய்லரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் 'ப்ரீமியர் லார்ஜ் டெக்னாலஜி (முழுமையான ஸ்க்ரீன் மற்றும் நவீன ஒலி அமைப்புடன் கூடிய வசதி)' மூலம் திரையரங்குகளிலும் நேரடியாக இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டு இருக்கிறது. இந்த நவீன டெக்னாலஜியை இந்தியாவில் ஒரு திரைப்படத்தின் டிரெய்லருக்கு உபயோகிப்பது இதுவே முதல்முறை.

Related Stories

No stories found.