கோவில் கோவிலாக ஏறியிறங்கும் விஜய் தேவரகொண்டா... கண்டுகொள்ளாத சமந்தா!

நடிகர் விஜய் தேவரகொண்டா...
நடிகர் விஜய் தேவரகொண்டா...

'குஷி’ படத்தின் வெற்றிக்காக நடிகர் விஜய் தேவரகொண்டா கோயில் கோயிலாக ஏறி இறங்கியபடி உள்ளார்.

நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் கடந்த ஒன்றாம் தேதி ‘குஷி’ திரைப்படம் வெளியானது. இந்தப் படம் வெளியான மூன்று நாட்களிலேயே உலகம் முழுவதும் 70 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. படம் வசூல் செய்திருந்தாலும் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களையேப் பெற்று வருகிறது. இதனால் பட வெளியீட்டுக்குப் பிறகான புரோமோஷனின் ஒரு பகுதியாக கோவில் கோவிலாக ஏறி இறங்கி தரிசனம் செய்து வருகிறார். அந்த வகையில் நேற்று முன் தினம் யாதாத்ரி லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலுக்கு நடிகர் விஜய்தேவரகொண்டா மற்றும் ‘குஷி’ படக்குழு சென்று தரிசித்தனர்.

தன்னுடைய சம்பளத்தில், ரூ.1 கோடியை நூறு ரசிகர்களின் குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து, தலா ரூ.1 லட்சம் ரூபாய் தரப்போவதாக அறிவித்துள்ளார் நடிகர் விஜய்தேவரகொண்டா.

அதே போல், இன்று விசாகப்பட்டினத்தில் உள்ள சிம்ஹாசல கோவிலுக்கு சென்று படக்குழுவினர் தரிசனம் செய்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் விஜய் தேவரகொண்டா புரோமோஷனுக்காக கலந்து கொண்டுள்ளார். ஆனால், பட வெளியீட்டுக்குப் பிறகு ‘குஷி’ பட புரோமோஷனில் சமந்தா பெரிதாக கவனம் செலுத்தவில்லை. உடல்நிலையைக் காரணம் காரணமாக நடிகை சமந்தா கலந்துக் கொள்ளவில்லை என்று கூறப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in