நடிகர் விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ படத்திற்கு புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சி.எஸ். அமுதன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'ரத்தம்' திரைப்படம் செப்டம்பர் 28ம் தேதி வெளியாக இருந்த நிலையில், தற்போது வெளியீட்டை அக்டோபர் 6 ம் தேதிக்கு மாற்றி அறிவித்துள்ளனர்.
இயக்குநர் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் வித்தியாசமான பொலிடிகல் திரில்லர் திரைப்படமாக 'ரத்தம்' உருவாகியுள்ளது. விஜய் ஆண்டனியுடன் இணைந்து மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
செப்டம்பர் 28 அன்று வெளியாகும் என முன்பு இந்தப் படம் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், ‘சந்திரமுகி2’ திரைப்படம் விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினத்தில் இருந்து தொழில்நுட்ப பணிகள் காரணமாக செப்டம்பர் 28ம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் ‘ரத்தம்’ திரைப்படம் தனது வெளியீட்டுத் தெதியை அக்டோபர் 6ம் தேதிக்கு மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.