அப்பாவும் தற்கொலை... மகளும் தற்கொலை... உருக்கமாக பேசிய நடிகர் விஜய் ஆண்டனி... வைரலாகும் வீடியோ!

விஜய் ஆண்டனி தன் மகளுடன்...
விஜய் ஆண்டனி தன் மகளுடன்...

நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா இன்று காலை திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் பாடலாசிரியர் கபிலனின் மகள் இப்படி தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்ட காயங்களே ஆறாத நிலையில், திரைத்துறையில் அடுத்த தற்கொலை மரணம். மன அழுத்தம் காரணமாக மாணவி மீரா தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படும் நிலையில், முன்பு பேட்டி ஒன்றில் நடிகர் விஜய் ஆண்டனி தற்கொலை தொடர்பாக பேசிய விஷயத்தை ரசிகர்கள் தற்போது வைரலாக பகிர்ந்து, தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வீடியோவில் அவர், ‘ நிறைய பேருக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வருகிறது என கேள்விப்படுகிறேன். மற்றவர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை ஏமாற்றத்தில் முடியும் போது அந்த எண்ணம் வருகிறது. குறிப்பாக படிப்பினால் மாணவர்களுக்கு அழுத்தம் கூடுகிறது. பள்ளி முடிந்து வந்தவுடன் டியூஷன் போ, அது போ, இது போ என அவர்களை நாம் ஒரு இயந்திரமாக பயன்படுத்தி கொண்டு இருக்கிறோம். அதிக அழுத்தம் கொடுக்காமல் பிள்ளைகளை ஃப்ரீயா விடுங்க" என பேசியுள்ளார். 

இதுமட்டுமல்லாது ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ‘எந்த காரணமாக இருந்தாலும் யாராக இருந்தாலும் தற்கொலை செய்து கொள்ள கூடாது. அது பொறுப்பில்லாத்தனம். எனக்கு ஏழு வயதாகும் போது என் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது என் தங்கச்சிக்கு ஐந்து வயது. என் அம்மா, இரண்டு குழந்தைகளையும் வைத்து கொண்டு அப்போது எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது எனக்கு தெரியும். அதனால், தற்கொலை செய்து கொள்ளாதீர்கள்’ எனக் கூறியுள்ளார்.

விஜய் ஆண்டனியின் வார்த்தைகளை அவரது மகள் கேட்டிருக்க வேண்டும் என ரசிகர்கள் உருக்கமாகப் பகிர்ந்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in