'தளபதி 67' படத்தில் ரெவன்யூ ஷேரிங்கில் களம் இறங்கும் நடிகர் விஜய்?

'தளபதி 67' படத்தில் ரெவன்யூ ஷேரிங்கில் களம் இறங்கும் நடிகர் விஜய்?

‘வாரிசு’ படத்தை அடுத்து நடிகர் விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் தன்னுடைய 67-வது படத்திற்காக இணைகிறார். இந்தப் படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ‘தளபதி 67’ படத்தில் ரெவன்யூ ஷேரிங் முறையில் நடிகர் விஜய் களம் இறங்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ரெவன்யூ ஷேரிங் முறை என்பது பாலிவுட்டில் பிரபலமானது. அதாவது, படம் வெளியான பிறகு அதன் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்‌ஷனில் இருந்தும் லாபத்தில் இருந்து கதாநாயகனுக்கு குறிப்பிட்ட பங்கு கிடைக்கும்.

பாலிவுட்டில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடத்திலும் சில முன்னணி நடிகர்கள் இந்த ரெவன்யூ ஷேரிங் முறையை பின்பற்றி வருகின்றனர். ஆனால், தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்தான் முதன்முதலாக இதைப் பின்பற்ற இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் அளவில் சம்பளம் வாங்கக்கூடிய முன்னணி நடிகர்களில் ஒருவராக விஜய் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ’பீஸ்ட்’ படத்திற்குப் பிறகு ‘வாரிசு’ படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in