சூர்யாவுக்கு வில்லனாகும் தமன்னாவின் காதலர்! எகிறும் எதிர்பார்ப்பு!

’சூர்யா43’...
’சூர்யா43’...

நடிகர் சூர்யாவுக்கு பிரபல நடிகையின் காதலர் வில்லனாக நடிக்கவுள்ள செய்தி ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளது.

நடிகர் சூர்யா தற்போது ‘கங்குவா’ படத்தில் தீவிரம் காட்டி வருகிறார். பான் இந்தியா படமாக உருவாகி வருவதால், வேறு எந்த படங்களிலும் நடிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தாமல் முழு கவனத்தையும் ‘கங்குவா’ படத்தில் குவித்து வருகிறார் சூர்யா.

இந்நிலையில், சுதா கொங்கரா இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் அவரின் 43வது படம் குறித்தான தகவல்களும் அவ்வப்போது வெளியாகிக் கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் கூட நடிகை நஸ்ரியா மற்றும் துல்கர் சல்மான் ஆகியோர் சூர்யாவின் அடுத்தப்படத்தில் இணைவதாக சொல்லப்பட்டது.

தமன்னா & விஜய்வர்மா...
தமன்னா & விஜய்வர்மா...

இந்நிலையில், இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு வில்லனாக நடிக்க நடிகை தமன்னாவின் காதலரும், பாலிவு நடிகருமான விஜய் வர்மாவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சூர்யா, நஸ்ரியா, துல்கர், விஜய் வர்மா என இந்தக் கூட்டணி உறுதியானால் நிச்சயம் கதை மாஸாக இருக்கும் என ரசிகர்கள் தங்களது எதிர்பார்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in