பிக் பாஸ் வாய்ப்புக்காக மீண்டும் காத்திருக்கிறேன்... மனம் திறந்த விஜய் வர்மா!

விஜய் வர்மா
விஜய் வர்மா

``பிக் பாஸ் வாய்ப்புக்காக மீண்டும் காத்திருக்கிறேன்'' என வெளியேறிய போட்டியாளர் விஜய் வர்மா மனம் திறந்துள்ளார்.

’மிரியம்மா’ பட விழா
’மிரியம்மா’ பட விழா

ரேகா நடிப்பில், மாலதி நாராயணன் இயக்கத்தில் ‘மிரியம்மா’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதன் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் நடிகரும் பிக் பாஸ்7 போட்டியாளருமான விஜய் வர்மா கலந்து கொண்டார். கடந்த வாரத்தில் பிக் பாஸ்7 நிகழ்ச்சியில் இருந்து குறைந்த மக்கள் வாக்குகள் அடிப்படையில் அவர் வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் வர்மா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் வர்மா

இந்த நிலையில், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது, “நட்பின் அடிப்படையில் தான் இந்த நிகழ்வில் வந்து கலந்து கொண்டேன். நான் வெளியேற்றப்படுவேன் என்று நினைக்கவில்லை. மக்கள் தரும் ஆதரவைப் பார்க்கும் போது வியப்பாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்து உள்ளே சென்றால் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று பேசினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in