`வாரிசு’ சக்சஸ் பார்ட்டியில் கலந்து கொள்ளும் விஜய்?

`வாரிசு’ சக்சஸ் பார்ட்டியில் கலந்து கொள்ளும் விஜய்?

நடிகர் விஜய் ‘வாரிசு’ வெற்றி விழாவில் கலந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தானா நடிப்பில் வம்சி இயக்கத்தில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான ‘வாரிசு’ திரைப்படம் உலகம் முழுவதும் 250 கோடிக்கும் அதிக வசூலைப் பெற்றிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விமர்சன ரீதியாக படம் கலவையான வரவேற்பைப் பெற்றிருந்தாலும் வசூலில் நல்ல வரவேற்பையே பெற்றுள்ளது. இந்த நிலையில், ‘வாரிசு’ படத்திற்காக சக்சஸ் பார்ட்டி ஹைதராபாத்தில் நடைபெற இருக்கிறது. இதில் நடிகர் விஜய் கலந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

’வாரிசு’ திரைப்படம் தெலுங்கிலும் வெளியான நிலையில் படத்தின் புரோமோஷன்களுக்கு நடிகர் விஜய்யை அழைத்து வர முயற்சிப்பதாக தயாரிப்பாளர் வம்சி தெரிவித்திருந்தார். ஆனால், நடிகர் விஜய் ‘வாரசுடு’ படத்தின் தெலுங்கு புரோமோஷன்கள் எதிலும் கலந்து கொள்ளவில்லை. இதனால், ஹைதராபாத்தில் நடைபெறும் இதன் சக்சஸ் பார்ட்டியில் கலந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ‘பீஸ்ட்’ படம் வெளியான பின்பு இதே போன்று படக்குழுவினருடன் சக்சஸ் பார்ட்டியில் விஜய் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in