தளபதி, தலைவனாவதை சூழ்நிலைதான் முடிவு செய்யும்: நடிகர் விஜய்

தளபதி, தலைவனாவதை சூழ்நிலைதான் முடிவு செய்யும்: நடிகர் விஜய்

``இந்த தளபதியை தலைவனாக்க வேண்டுமா என்பதை ரசிகர்களும் சூல்நிலையும்தான் முடிவு செய்ய வேண்டும்'' என்று நடிகர் விஜய் தெரிவித்தார்.

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம், ’பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். படம் வரும் 13-ம் தேதி வெளியாகிறது. வழக்கமாக விஜய் படங்களுக்கு பாடல் வெளியீட்டு விழா நடைபெறும்.

பீஸ்ட் படத்தின் பாடல் வெளியீட்டையும் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்தனர். ஆனால், பாடல் வெளியீடு நடத்தப்படவில்லை.

அதற்குப் பதிலாக விஜய் அளித்த பேட்டி, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. பத்து வருடத்துக்குப் பிறகு விஜய் அளித்த பேட்டி இது. அவரை இயக்குநர் நெல்சன் பேட்டி எடுத்தார். அப்போது அரசியலுக்கு வருவது பற்றி நடிகர் விஜய் கூறியதாவது:

கடந்த 30 வருடத்தில், சாதாரண நடிகனாக இருந்த என்னை, பார்த்து படிப்படியாக வளர்த்து தளபதியாக்கியது ரசிகர்கள்தான். இந்தத் தளபதியை தலைவனா ஆக்கணுமா அப்படிங்கறதை அவங்கதான் முடிவு பண்ணணும். நான் சாதாரண விஜய்யா இருக்கத்தான் ஆசைப்படறேன். அதை சூழ்நிலைதான் முடிவு பண்ணும். மாறணும்னா மாறித்தானே ஆகணும். பூவே உனக்காக விஜய்யா இருக்கணுமா, பீஸ்ட் விஜய்யா இருக்கணுமா அப்படிங்கறதை சூழ்நிலைதான் முடிவு பண்ணும். இவ்வாறு நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

இதனால் அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in