இனி இப்படி செய்தால்... மக்கள் இயக்க நிர்வாகிக்கு நடிகர் விஜய் கடும் எச்சரிக்கை!

நடிகர் விஜய்...
நடிகர் விஜய்...

பூத் கமிட்டி விவரங்களை வெளியிடுவதில் ஏற்பட்டக் குளறுபடிகள் காரணமாக செங்கல்பட்டு மக்கள் இயக்க நிர்வாகியை நடிகர் விஜய் தொலைபேசி மூலமாக கடுமையாக எச்சரித்துள்ளார்.

சமீபகாலமாக நடிகர் விஜய் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதற்கேற்றாற்போல, மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வழங்கியது, இரவுநேர பாடசாலை, இலவச சட்ட ஆலோசனை மையம் போன்றவற்றை விஜய் மக்கள் இயக்கம் முன்னெடுத்து வருகிறது. விரைவில் விஜய் அரசியல் கட்சி தொடங்க உள்ளார் எனவும் சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள 185 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளில் விஜய் மக்கள் இயக்கம் தீவிரம் காட்டி வருகின்றனர். இது தொடர்பாக, பூத் கமிட்டி அமைக்கும் நிர்வாகிகளை தொடர்புகொண்டு நடிகர் விஜய் ஆய்வு செய்து வருகிறார்.

விஜய் இலவச சட்ட ஆலோசனை மையம்...
விஜய் இலவச சட்ட ஆலோசனை மையம்...

இந்த பூத் கமிட்டி அமைக்கும் விஷயத்தில்தான் குளறுபடிகள் நடந்துள்ளது. இதன் காரணமாக, தாம்பரம் தொகுதியின் மாவட்டத்தலைவர் மின்னல் குமாரை அலைபேசியில் அழைத்துப்பேசிய விஜய் அவரது குளறுபடியான பணிகளைச் சுட்டிக்காட்டி எச்சரித்துள்ளார். இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in