முன்னாள் முதல்வரின் பயோபிக்கில் நடிக்கும் விஜய்சேதுபதி?

முன்னாள் முதல்வரின் பயோபிக்கில் நடிக்கும் விஜய்சேதுபதி?

நடிகர் விஜய்சேதுபதியை முன்னாள் முதல்வரின் பயோபிக்கில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் பயோபிக் எடுக்கத் தீவிர முயற்சிகள் நடந்து வரும் நிலையில், இதில் சித்தராமையாவாக நடிக்க நடிகர் விஜய்சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தன்னுடைய பயோபிக்கிற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருவைதையும் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊடகங்களிடம் உறுதிப்படுத்தினார் சித்தராமையா. அவர் கூறியதாவது, “என்னுடைய வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க வேண்டும் என்று கருதி சிலர் என்னை அணுகினார்கள். ஆனால், அதில் நான் நடிக்கவில்லை” என்றுத் தெரிவித்து இருக்கிறார்.

மக்கள் செல்வாக்குடன் கூடிய நபரான சித்தராமையாவின் பேச்சுகளுக்கென்றுத் தனி ரசிகர்கள் உள்ளனர். இவரது பயோபிக்கைத் தயாரிக்க சிவராஜ் தங்கடகி ஆர்வம் காட்டி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இது குறித்து, சிவராஜ் தெரிவித்திருப்பதாவது, ‘தற்போது தேர்தல் நேரம் என்பதால் இப்போதைக்கு இதுகுறித்து அவர் பேசுவதைத் தள்ளி வைத்திருக்கிறார். ஆனால், டிசம்பர் முதல் வாரத்தில் நாங்கள் மீண்டும் இது குறித்து பேசவுள்ளோம்” என்றார். இந்தப் படத்தில்தான் சித்தராமையாவின் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய்சேதுபதியைக் கேட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in