
நடிகர் ஷாருக்கானின் ‘பதான்’ படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் விஜய் வெளியிட்டுள்ளார்.
சித்தார் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கக்கூடிய திரைப்படம் ‘பதான்’. ஜனவரி 25-ம் தேதி ரிலீஸாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பான் இந்தியா படமாக திரையரங்குகளில் வெளியாகிறது. இன்று இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது. இதன் தமிழ் மொழி டிரெய்லரை நடிகர் விஜய் வெளியிட்டுள்ளார். நடிகர் ஷாருக்கான் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து இந்த டிரெய்லரை விஜய் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் - நயன்தாரா நடித்து வரும் ‘ஜவான்’ படத்தில் நடிகர் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். மேலும், ஷாருக்கானுக்கும் விஜய்க்கும் இடையில் நல்ல நட்பும் இருக்கிறது. ஏற்கெனவே ‘பதான்’ படத்தில் இருந்து வெளியான பாடலுக்கு தீபிகா படுகோனின் உடை நிறத்தை வைத்தும் ஷாருக்கானின் மதத்தை இணைத்தும் சமூகவலைதளத்தில் பிரச்சினை கிளம்பியது. இந்த நிலையில், தனது நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக வசனங்கள் பேசியும் சோல்ஜராகவும் இந்த ‘பதான்’ படத்தில் ஷாருக்கான் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.