ரஜினி பட இயக்குநரின் கதையை இரண்டு முறை நிராகரித்த விஜய்... வெளியான தகவல்!

ரஜினிகாந்த், கார்த்திக் சுப்பராஜ்
ரஜினிகாந்த், கார்த்திக் சுப்பராஜ்

தனது கதையை நடிகர் விஜய் பிடிக்காமல் இரண்டு முறை நிராகரித்து விட்டதாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் மனம் திறந்து பேசியுள்ளார்.

விஜய், கார்த்திக் சுப்பராஜ்
விஜய், கார்த்திக் சுப்பராஜ்

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘ஜிகர் தண்டா2’ திரைப்படம் அடுத்த மாதம் தீபாவளிக்கு வெளியாகிறது. இதனை ஒட்டி, இந்தப் படத்திற்காக கொடுத்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் விஜய்க்குத் தான் கதை சொல்லி அது இரண்டு முறை அவர் நிராகரித்தது குறித்து கார்த்திக் சுப்பராஜ் பேசியுள்ளார். இந்தப் பேட்டியில் அவர் தெரிவித்திருப்பதாவது, ’கதை சொல்வது மிகப்பெரிய கலை. அது இன்னும் எனக்கு முழுதாக வரவில்லை என்றுதான் சொல்வேன். விஜய் சாரிடம் அப்படி நான் இரண்டு முறை கதை சொன்னேன்.

நடிகர் ராகவா லாரன்ஸ்
நடிகர் ராகவா லாரன்ஸ் 'ஜிகர்தண்டா- டபுள் எக்ஸ்' படத்தில்...

ஆனால், நான் கதை சொன்ன விதம் அவரை பெரிதாக ஈர்க்கவில்லை. இதனால், அவர் இரண்டு முறையும் என் கதைகளை நிராகரித்துவிட்டார். விரைவில் சிறந்த ஒரு கதையை தயார் செய்து அவரோடு இணைவேன் என்ற நம்பிக்கை உள்ளது. அந்தக் கதை நிச்சயம் விஜய் சாருக்கு சிறந்தப் படமாக அமையும்’ என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு சித்தார்த், பாபி சிம்ஹா ஆகியோரது நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘ஜிகர்தண்டா’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in