‘வாரிசு’க்காக.. வருகை தந்த எஸ்.ஏ.சி - ஷோபா

‘வாரிசு’க்காக.. வருகை தந்த எஸ்.ஏ.சி - ஷோபா

’வாரிசு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், விஜய்யின் பெற்றோர் பங்கேற்றது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சி தந்துள்ளது.

வம்சி இயக்கத்தில் ராஷ்மிகா மந்தன்னா உள்ளிட்டோர் உடன் நடிக்க, விஜய்யின் அடுத்த திரைப்படமாக, வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது ‘வாரிசு’. தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாகும் வாரிசு திரைப்படம், 2 மொழிகளிலுமே கடும் சவால்களை கடந்து திரைக்கு வர இருக்கிறது.

அந்த சவால்களில் ஒன்று, நடிகர் விஜய்யை தனிப்பட்ட வகையில் தாக்கியது. விஜய் மக்கள் இயக்க செயல்பாடுகளில், விஜய்யின் தந்தை எஸ்ஏசி எடுத்த சில முடிவுகள் காரணமாக தந்தை - மகன் இடையே கருத்து வேற்றுமை வளர்ந்தது. வீடு தோறுமான வாசலாக நேரிட்ட பிரச்சினை, விஜய்யின் நட்சத்திர ஒளிவட்டம் காரணமாக பொதுவெளியில் பெரிதாக பேசப்பட்டது.

அதிலும் வாரிசு என்ற தலைப்பிலான திரைப்படத்தில் தோன்றும் விஜய், தனது குடும்பத்தில் பொறுப்பான வாரிசாக இருக்கிறாரா.. என்றெல்லாம் சிலர் கேள்வி எழுப்பினர். விஜய் தரப்பை சங்கடத்தில் ஆழ்த்தும் இந்த கேள்விக்கு, வாரிசு இசை விழாவில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

பெரும் ஆரவாரத்துடன் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை தொடங்கிய ’வாரிசு’ இசை வெளியீட்டு விழாவில், விஜய்யின் பெற்றோரான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகியோர் பங்கேற்றுள்ளனர். ரசிகர்களின் பலத்த வரவேற்புக்கு மத்தியில் அவர்கள் பிரவேசித்தனர்.

வாரிசு திரைப்படத்துக்கு எதிரான சவால்கள் ஒவ்வொன்றாக முறியடித்து வரும் விஜய், பெற்றோருடனான பிணக்கை தீர்க்கும் வகையில் இந்த இசை விழாவில் அவர்களை பங்கேற்க செய்துள்ளார் என ரசிகர்கள் பெருமிதம் கொண்டிருக்கின்றனர். மேலும், தங்கள் விருப்பத்துக்குரிய விஜய்யின் குடும்பம் ஒன்று சேர்ந்ததில் ரசிகர்கள் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் ஒருசேர கொண்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in