‘வாரிசு’ பட ரிலீஸ்... ரஜினி பாணியில் ரசிகர்களை சந்திக்கும் விஜய்: சென்னை பனையூரில் பரபரப்பு!

‘வாரிசு’ பட ரிலீஸ்... ரஜினி பாணியில் ரசிகர்களை சந்திக்கும் விஜய்: சென்னை பனையூரில் பரபரப்பு!

சென்னை பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை நடிகர் விஜய் இன்று சந்திக்கிறார்.

நடிகர் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தை ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் அதிக திரையரங்குகளில் வெளியிட தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவிப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று சென்னை பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் ரசிகர்களை நடிகர் விஜய் சந்திக்கிறார்.

சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நாமக்கல், சேலம், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளை இன்று விஜய் சந்திக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின்போது ரசிகர்களுடன் விஜய் புகைப்படம் எடுத்துக்கொள்வார் எனவும், மக்கள் இயக்க செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து அறிவுரைகளை வழங்குவார் எனவும் சொல்லப்படுகிறது. அடையாள அட்டை வைத்துள்ள நிர்வாகிகள் மட்டுமே அலுவலகத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் செல்போன்கள் பயன்படுத்த அனுமதி இல்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ரசிகர்களுக்கு மதிய உணவாக பிரியாணியும் வழங்கப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது. சுமார் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் ரசிகர்களை விஜய் மீண்டும் சந்திப்பதால், பனையூர் பகுதியில் ரசிகர்கள் கூட்டம் குவிந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

ரஜினி தனது பட ரிலீஸ் சமயத்தில் ஆடியோ வெளியீடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கருத்துக்களை தெரிவிப்பார், அது பரபரப்பாக பற்றிக்கொள்ளும். அதுபோல தனது சமீபத்திய படங்களின் ரிலீஸின் போது விஜய் கூறிய கருத்துகள் சலசலப்பை உருவாக்கின. அதேபோல ரஜினியின் பாணியிலேயே இப்போது ‘வாரிசு’ படத்தின் ரிலீசிற்கு முன்பு ரசிகர்களையும் விஜய் சந்திக்கிறார் என சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in