ஷாருக்கான் படத்தில் இணைந்த நடிகர் விஜய்!

ஷாருக்கான் படத்தில் இணைந்த நடிகர் விஜய்!

ஷாருக்கானின் ‘ஜவான்’ படப்பிடிப்பில் நடிகர் விஜய் இணைந்துள்ளார்.

’ராஜா ராணி’ படம் மூலமாக தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் அட்லி. பிறகு ‘தெறி’, ’மெர்சல்’, ‘பிகில்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். கடந்த 2019-ல் தீபாவளி வெளியீடாக வந்த ‘பிகில்’ படத்திற்கு பின்பு பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து அட்லி படம் இயக்குவதாக தகவல் வெளியானது. பின்பு இதனை உறுதிப்படுத்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘ஜவான்’ என படத்தின் தலைப்பையும் வெளியிட்டு படக்குழு இதனை உறுதி செய்தது.

நயன்தாரா, யோகிபாபு என பல தமிழ் நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மும்பையில் இதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்காக ஷாருக்கான், அட்லி என படக்குழு மொத்தமும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்தது.

தற்போது ஸ்பெயினில் இருக்கும் நயன்தாராவும் விரைவில் சென்னையில் நடக்கும் ‘ஜவான்’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். இந்நிலையில் நடிகர் விஜய் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார் என செய்தி வெளியான நிலையில் தற்போது அது உறுதியாகி உள்ளது.

சம்பளம் எதுவும் வாங்காமல் நட்பின் அடிப்படையில் நடிகர் விஜய் ‘ஜவான்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இதற்காக அவர் படப்பிடிப்பு தளத்தில் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in