'பீஸ்ட்' படத்திற்காக பேட்டி கொடுத்த நடிகர் விஜய்!

'பீஸ்ட்' படத்திற்காக பேட்டி கொடுத்த நடிகர் விஜய்!

நடிகர் விஜய் நீண்ட நாட்கள் கழித்து 'பீஸ்ட்' படத்திற்காக தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்திருக்கிறார்.

'டாக்டர்' பட வெற்றிக்கு பிறகு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் முதன் முறையாக நடிகர் விஜய்யுடன் இணைந்துள்ள படம் 'பீஸ்ட்'. படத்தில் பூஜா ஹெக்டே, ரெடின், செல்வராகவன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படம் ஏப்ரல் 13-ம் தேரி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தில் இருந்து 'அரபிக்குத்து', 'ஜாலியோ ஜிம்கானா' ஆகிய இரண்டு பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே ட்ரெண்டாகி உள்ளது.

இந்நிலையில், 'பீஸ்ட்'க்கு முன்பாக லோகேஷ் இயக்கத்தில் 'மாஸ்டர்' படம் வெளியான போது அந்த திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யின் அரசியல் பேச்சும் அப்போது 'மாஸ்டர்' பட சமயத்தின்போது அவர் வீட்டில் நடந்த சோதனையும் அதிக கவனம் பெற்றது. பொதுவாகவே, நடிகர் விஜய்யின் பட வெளியீட்டுக்கு முன்பாக அவரது ஆடியோ லான்ச் பேச்சுகள் வைரலாகும்.

அப்படி 'பீஸ்ட்' படத்துக்கும் நடிகர் விஜய்யின் ஆடியோ லான்ச் எப்போது என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்ப்பார்த்து இருந்தனர். ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஆடியோ லான்ச் இந்த படத்திற்கு இல்லை என தகவல் வெளியானது.

சன் பிக்சர்ஸ் படத்தை தயாரிப்பதால் சன் டிவியில் நடிகர் விஜய் மற்றும் 'பீஸ்ட்' படக்குழுவின் பேட்டிக்கான படப்பிடிப்பு இன்று முடிந்துள்ளது. இந்த பேட்டியானது அடுத்த மாதம் பட வெளியீட்டுக்கு முன்பாக 10-ம் தேதி இரவு ஒளிபரப்ப உள்ளார்கள். பல வருடங்களுக்கு பிறகு நடிகர் விஜய் கொடுக்கும் தொலைக்காட்சி பேட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.