ஜெயிலர் படத்துக்கு விஜய் தான் காரணம்... நெல்சன் நெகிழ்ச்சி!

ஜெயிலருக்கு நம்பிக்கை கொடுத்த விஜய்; நெகிழ்ந்த நெல்சன்!
ஜெயிலருக்கு நம்பிக்கை கொடுத்த விஜய்; நெகிழ்ந்த நெல்சன்!

’பீஸ்ட்’ சமயத்தில் நடிகர் விஜய் கொடுத்த நம்பிக்கைப் பற்றி நெல்சன் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

நேற்று நடந்த ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் நெல்சன் பேசியிருப்பதாவது, ‘'பீஸ்ட்’ படத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது விஜய் சார் தான் ரஜினி சாருக்கு என்னை கதை சொல்லும்படி சொன்னார். ஆனால், ரஜினி சாரை சந்திப்பதும் அவர் என் கதைக்கு சம்மதம் தெரிவிப்பார் என்றும் நான் நம்பவில்லை. விஜய் சார் தான், ‘ரஜினி சார் நிச்சயம் சம்மதிப்பார்’ என்று நம்பிக்கை கொடுத்தார்.

அந்த நம்பிக்கையால் தான் எல்லாம் நடந்தது. படப்பிடிப்பு முடியும் வரை டீமோடு முழு ஒத்துழைப்பு கொடுத்து, நம்பிக்கை வைத்து, எங்களை மரியாதையோடு நடத்தினார் ரஜினி சார்’ என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார் நெல்சன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in