நடிகர் விஜய்க்கு அபராதம்: சென்னை போக்குவரத்து போலீஸ் அதிரடி நடவடிக்கை

நடிகர் விஜய்க்கு அபராதம்: சென்னை போக்குவரத்து போலீஸ் அதிரடி நடவடிக்கை

நடிகர் விஜய்க்கு 500 ரூபாய் அபராதம் விதித்தனர் சென்னை போக்குவரத்து போலீஸார்.

தமிழ் திரை உலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கு ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. அண்மை காலமாக நடிகர் விஜய் தனது இயக்கத்தின் நிர்வாகிகளை அரசியலில் ஈடுபடுத்தி வருகிறார். கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த கிராப்புற உள்ளாட்சித் தேர்தலிலும், திமுக ஆட்சியில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனது இயக்கத்தின் நிர்வாகிகளை போட்டியிட அனுமதி அளித்தார். இந்தத் தேர்தலில் கணிசமான வெற்றியை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பெற்றனர்.

அதேபோல், 2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை களமிறக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தனது நிர்வாகிகளுடன் விஜய் ரகசியமாக ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 20-ம் தேதி பனையூரில் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்க நடிகர் விஜய் காரில் சென்றுள்ளார். அப்போது அவரது கார் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியதாக புகார் எழுந்தது. இந்த புகாரியின் பேரில் மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில் நடிகர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்த போக்குவரத்து போலீஸார் அவருக்கு 500 ரூபாய் விதித்துள்ளனர்.

போக்குவரத்து விதியை மீறி நடிகர் விஜய்க்கு போக்குவரத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்திருப்பது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in