'ஆடியோ லாஞ்ச் இல்லைனா, என்ன?... ஆட்சிய புடிச்சுட்டா போச்சி'! - அதிர வைக்கும் விஜய் ரசிகர்கள்!

காஞ்சிபுரத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்
காஞ்சிபுரத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

'லியோ' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், நடிகர் விஜய் ரசிகர்கள் திமுகவிற்கு எதிராக கொந்தளிக்கத் தொடங்கியுள்ளனர்.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள போஸ்டர்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள போஸ்டர்

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் 5வது படமாக உருவாகியுள்ள 'லியோ'வில் விஜய், த்ரிஷா, சஞ்ஜய் தத், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான்,மேத்தியு தாமஸ், ஜோஜூ ஜார்ஜ், மடோனா செபாஸ்டியன், அனுராஜ் காஷ்யப், இயக்குநர்கள் கெளதம் மேனன், மிஷ்கின், ஜவஹர் உள்ளிட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் அக்டோபர் 19-ம் தேதி வெளியாக உள்ளது.

இதனிடையே செப்டம்பர் 30-ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் இசை வெளியீட்டு விழா நடக்கவிருந்த நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இதில் அரசியல் அழுத்தம் இல்லை என தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்திருந்தது.

இப்படியான நிலையில் 'லியோ' இசை வெளியீட்டு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளத்தில் விஜய் ரசிகர்கள் கருத்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்ட விஜய் மக்கள் இயக்க தொண்டரணி சார்பில், நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. " ஆடியோ லாஞ்ச் இல்லைனா... என்ன ! ஆட்சிய புடிச்சுட்டா போச்சி என்ன நண்பா ? ".

’’இளைஞர் அணி, தொண்டரணி, மகளிர் அணி ,வழக்கறிஞர் அணி, மாணவரணி, விவசாய அணி உள்ளிட்ட அணிகள் தயார் நிலையில் உள்ளது , அண்ணா உங்களுடைய அதிரடி அறிவிப்பிற்காக காத்துக் கொண்டிருக்கிறோம்’’ என இரண்டு போஸ்டர்கள் செங்கல்பட்டு நகர் முழுவதும் ஒட்டப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், போஸ்டர் மூலம் தொண்டர்கள் அறைகூவல் விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in