`லியோ' பாஸ் இருந்தும் அனுமதி மறுப்பு: போலீஸிடம் மல்லுக்கட்டிய விஜய் ரசிகை!

வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரசிகை
வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரசிகை

'லியோ' வெற்றி விழாவுக்கான பாஸ் இருந்தும் நிகழ்விற்கு உள்ளே தன்னை அனுமதிக்க மறுப்பது ஏன் என போலீஸாரிடம் விஜய் ரசிகை ஒருவர் வாக்குவாதம் செய்துள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'லியோ' படத்தின் வெற்றி விழா தற்போது நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. பேருந்துகளுக்கு அனுமதி இல்லை, விஜய் ரசிகர் மன்ற இயக்கத்தினர் மட்டுமே பங்கேற்பு, என்ட்ரி பாஸூடன் ஆதார் கார்டும் கொண்டு வர வேண்டும் என ஏராளமான கட்டுப்பாடுகளை இந்த நிகழ்வுக்கு விதித்துள்ளது காவல்துறை.

நடிகர் கமல்ஹாசன் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பார் என முன்பு தகவல் வெளியான நிலையில் அதை ரோகிணி திரையரங்க உரிமையாளர் ரேவந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் மறுத்துள்ளார். முன்பு ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகள் காரணமாக முன்பு 'லியோ' இசை வெளியீட்டு விழா ரத்தானது. அதேபோன்று இப்பொழுது நடந்து விடக்கூடாது என்பதற்காகவே ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் மட்டுமே பங்கேற்கின்றனர்.

இந்த நிலையில், ரசிகை ஒருவர் தன்னிடம் வி.ஐ.பி. பாஸ் இருந்தும் அரங்கம் நிறைந்துவிட்டது என சொல்லி தன்னை உள்ளே அனுமதிக்க மறுக்கின்றனர் என போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, "நான் அரங்கத்தில் உள்ளே நிகழ்வை நின்று கொண்டு பார்க்கிறேன் என்று சொல்லியும் என்னை உள்ளே விட மறுக்கிறார்கள். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in