அமலாக்கத்துறை முன்பு நடிகர் விஜய் தேவரகொண்டா ஆஜர்

அமலாக்கத்துறை முன்பு நடிகர் விஜய் தேவரகொண்டா ஆஜர்

நடிகர் விஜய் தேவரகொண்டா ஐதராபாத்தில் உள்ள அமலாக்க இயக்குநரக அலுவலகத்தில் ஆஜரானார்.

பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா 'லைகர்' படத்தில் நடித்திருந்தார். சுமார் 125 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாக இப்படத்திற்கு சந்தேகத்திற்குரிய வகையில் முதலீடு செய்யப்பட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் பக்கா ஜட்சன் புகார் அளித்தார். இதையடுத்து விஜய் தேவரகொண்டா, சினிமா இயக்குநர் பூரி ஜெகநாத், தயாரிப்பாளர் சார்மி கவுர் ஆகியோர் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை (ஃபெமா) மீறியதாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்நிலையில் இவ்வழக்குத் தொடர்பாக நடிகர் விஜய் தேவரகொண்டா ஐதராபாத்தில் உள்ள அமலாக்க இயக்குநரக அலுவலகம் முன் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அந்நியச் செலாவணி மோசடி குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in