பிரபல இயக்குநரின் மறைவை ஒட்டி நடிகர் விஜய் மன்னிப்பு கேட்டுள்ளார்.
திடீர் மாரடைப்பு காரணமாக சமீபத்தில் இயக்குநர் சித்திக் காலமானார். தமிழில் பிரெண்ட்ஸ், எங்கள் அண்ணா, காவலன், பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய படங்களை இயக்கியவர் சித்திக். நடிகர் விஜய்யை வைத்து ’பிரெண்ட்ஸ்’, ’காவலன்’ என இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் சித்திக். நடிகர் விஜய்க்கு அவசியம் ஒரு ஹிட் தேவைப்பட்ட சமயத்தில் அவர் இயக்கிய ‘காவலன்’ திரைப்படம் அவருக்கு கம்பேக்காக அமைந்தது.
இந்த நிலையில் நடிகர் விஜய் இன்று இயக்குநர் சித்திக்கின் குடும்பத்தினருக்கு தொலைபேசி வாயிலாக அழைத்து இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது வெளிநாட்டில் இருப்பதால் சித்திக்கின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள முடியவில்லை என வருத்தம் தெரிவித்திருக்கிறார். நடிகர் சூர்யா சித்திக்கின் வீட்டிற்கு சென்று நேரில் ஆறுதல் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.