‘உங்க குடும்ப பிரச்சினைக்கு அடுத்தவனை கூப்பிட்டால்...’ - விஜய் ஆண்டனியின் எச்சரிக்கை ட்வீட்

‘உங்க குடும்ப பிரச்சினைக்கு அடுத்தவனை கூப்பிட்டால்...’ - விஜய் ஆண்டனியின் எச்சரிக்கை ட்வீட்

‘உங்க குடும்ப பிரச்சினைக்கு அடுத்தவனை கூப்பிட்டால்...’ என்று எச்சரிக்கும் விதமாக நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ள இது தொடர்பான ட்வீட்டில், “உங்க குடும்பத்துல எதாவது பிரச்சனன்னா, முடிச்ச வரைக்கும் உங்களுக்குள்ள அடிச்சிக்கங்க, இல்ல விட்டு விலகிடுங்க, இல்ல கைல கால்ல விழுந்து சமாதானம் பண்ணி சேர்ந்து வாழுங்க. அடுத்தவன மட்டும் கூப்புடாதிங்க.

கும்மி அடிச்சி, கதைய முடிச்சிருவாங்க” என தெரிவித்துள்ளார்.

அடிக்கடி ட்விட்டரில் விஜய் ஆண்டனி பகிரும் கருத்துகளை ரசிகர் அதிகளவில் லைக் செய்வார்கள். தற்போதும், எந்த ஒரு சம்பவம் பற்றியும் குறிப்பிடாமல், பொதுவான அறிவுரையாக விஜய் ஆண்டனி இப்பதிவை வெளியிட்டுள்ளார். இதனை ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

பிரபல இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி கடந்த சில ஆண்டுகளாக நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான ‘நான்’, ‘பிச்சைக்காரன்’, ‘சலீம்’, ‘கோடியில் ஒருவன்’ போன்ற படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போதும் இவர் ’கொலை’, ‘ரத்தம்’, ‘வள்ளிமயில்’, ‘தமிழரசன்’, ‘அக்னிச் சிறகுகள்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in