இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி ‘பிச்சைக்காரன் 2’ படம் மூலமாக இயக்குநராகவும் தடம் பதித்துள்ளார். இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாக கலவையான வரவேற்பைப் பெற்றாலும் வசூலில் வெற்றி பெற்றது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியானது.
தெலுங்கில் இவரது ‘பிச்சைக்காரன்2’ சென்டிமென்ட் அங்குள்ள ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இயக்குநராக விஜய் ஆண்டனியை தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
தெலுங்கில் இந்தப் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் ராஜமுந்திரியில் உள்ள மருத்துவமனையில் விஜய் ஆண்டனி, புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சைக்கான பணத்தை கொடுத்து அவர்களை நேரில் சென்று நலம் விசாரித்துள்ள வீடியோவும் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.