5 வருடம் என்ன செய்தார்கள் என யோசித்து ஓட்டுப் போடுங்கள்... நடிகர் விஜய் ஆண்டனி அட்வைஸ்!

விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி

”ஓட்டு என்பது சக்திவாய்ந்த ஆயுதம். அதை வேஸ்ட் பண்ணாதீங்க. நோட்டாவுக்கு போடறதை விட வேறு யாருக்காவது ஓட்டு போடுங்க” என நடிகர் விஜய் ஆண்டனி தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.

’ரோமியோ’ விஜய் ஆண்டனி- மிருணாளினி ரவி
’ரோமியோ’ விஜய் ஆண்டனி- மிருணாளினி ரவி

இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் ‘ரோமியோ’ படம் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி வெளியாக இருக்கிறது. படங்களில் நடிப்பது ஒருபக்கம் என்றால் மியூசிக் கான்செர்ட் நடத்துவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார் விஜய் ஆண்டனி. வரவிருக்கும் ‘ரோமியோ’ படத்திற்காக கோவையில் பட நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டார்.

இதன் பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நிச்சயம் நீங்கள் ஓட்டுப் போட வேண்டும். நோட்டாவுக்கு போடுவதை விட, யாருக்காவது ஓட்டு போடுங்கள். அதை வேஸ்ட் செய்யாதீர்கள். உங்களுக்குப் பிடித்தவர்களுக்குப் போடுவதை விட, இந்த ஐந்து வருடத்தில் என்ன செய்திருக்கிறார்கள் என ஐந்து நிமிடம் யோசித்து ஓட்டுப் போடுங்கள்” என்றார்.

விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி

அப்போது அவரிடம் நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?’ என கேள்வி எழுப்பப்பட்டது. “நான் வரவேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால் வரலாம். மற்றபடி எந்த ஐடியாவும் இல்லை. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைக்கும் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நான் இனிமேல் எத்தனை படங்கள் எடுத்தாலும் அது ‘பிச்சைக்காரன்’ போல வருமா எனத் தெரியவில்லை. அதற்கு இணையாக ’ரோமியோ’ நிச்சயம் இருக்கும். அந்தப் படத்தில் அம்மா சென்டிமென்ட் போல, இதில் மனைவி.

இப்போதெல்லாம் நல்ல படங்கள் ஓடுவதற்கு சமூகவலைதளங்களே போதும். உதாரணத்திற்கு ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தைச் சொல்லலாம். அந்தப் படத்திற்கு இங்கு பிரஸ் மீட், புரோமோஷன் என எதுவும் செய்யவில்லை. ஆனால், மக்கள் அதைக் கொண்டாடினார்கள்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

இன்றே கடைசி... இதுவரை 751 பேர் வேட்புமனு தாக்கல்: சுயேட்சை வேட்பாளர்கள் அதிக ஆர்வம்!

தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு... ஓபிஎஸ் வாக்குறுதி!

பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் தமிழகத்தில் பதுங்கலா?... 5 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!

வெயிலுக்கு இதம் தரும் ஜில் தகவல்... தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2.80 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு... எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in