லியோவை சந்தித்த ஏஜென்ட் விக்ரம்... வைரல் புகைப்படம்!

கமலுடன் நடிகர் விஜய்
கமலுடன் நடிகர் விஜய்

நடிகர் விஜய் மற்றும் ‘லியோ’ குழுவினர் நடிகர் கமல்ஹாசனை சந்தித்துள்ள புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக உலகம் முழுவதும் 500 கோடி ரூபாயைத் தாண்டி வெற்றிப் பெற்றது. லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இந்த கதை இடம் பெற்றது. குறிப்பாக கிளைமாக்ஸில் ஏஜென்ட் விக்ரம் லியோவை தனது போதை ஒழிப்பு அணியில் சேர வேண்டும் என அழைப்பு விடுப்பது போல படம் முடிந்திருக்கும். படத்தில் கிளைமாக்ஸில் மட்டுமே கமல்ஹாசனின் குரல் மட்டும் இடம் பெற்றிருக்கும்.

கமலுடன் ‘லியோ’ படக்குழு
கமலுடன் ‘லியோ’ படக்குழு

இதில் கமல் போர்ஷனுக்கான டப்பிங் முடிந்த பிறகு கமலுடன் நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர்கள் லலித், ஜெகதீஷ் ஆகியோர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ‘லியோ’ படக்குழு வெளியிட்டு அவருக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. இந்தப் புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in